anthem

வித்தியலய கீதம்

பல்லவி
எழில்மிகு கோண்டவில் பதிமேவும் - எங்கள்
மகா வித்தியாலயம் வாழ்கவே !

அநுபல்லவி

அழகுறு கல்வி கவின்கலை இன்பம் 
அள்ளித்தரும் அன்னை வாழ்கவே

சரணம்

தமிழொடு சைவம் தழைத்திட அருளும்
தாயைப் போற்றித் துதிப்போமே !
அறிவியல் ஆங்கிலம் கணனி பல்றையின்
ஆக்க நலன்களும் அருள்வாளே !
(எழில்)
ஒழுக்கமும் பண்பும் உடையவராகி
உயரும் வழிகள் காண்போமே
மகிழ்ச்சி நல்லெண்ணம் மதித்திடும் அன்பாய்
மாணவர் நாம் உள்ளம் மலர்வோமே!
(எழில்)
வாழ்கவே! வாழ்கவே!  வாழ்கவே! வாழ்கவே! 

No comments:

Post a Comment