எமது பாடசாலையின் வரலாறும்,வளர்ச்சியும்
இலங்கையில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் அந்நியர் ஆட்சியில் மிசனறிமார்களின் பணியினால் கிறிஸ்தவ பாடசாலைகள் வளர்ச்சி பெறத் தொடங்கின, இக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் ஆறுமுக நாவலரின் பணியினால் சைவமும். தமிழும் நலியாமல் பாடசாலைகளும், ஆலயங்களும் நிறுவப்படலாயின.
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கியொளிர நிறுத்தல்
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறிவித்தல்
என்னும் பாரதியாரின் வாக்குக்கு முன் தீர்க்க சிந்தனையுடன் 1878ல் பிரம்ம சிறீ முருகேசு ஐயர் வெங்கடாசல ஐயர்அவர்களால் திண்ணைப் பாடசாலையாக இவ் வித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டது. இன்று இவ்வித்தியாலயம் வளர்ந்து நூற்றிருபத்தைந்தாண்டு கடந்து இந்து கல்லூரியாக தன் வளர்ச்சி பணியினை எட்டி உள்ளது . "எழுத்தறிவித்தவன் இறைவன்" ஆவான் என்ற பொது மொழிக்கமைய கல்விக் கண்ணைத் திறக்க ஐயர் அவர்களால் ஏற்றிய தீபம் குன்றின் மேல் இட்ட தீபமாக பிரகாசிக்கின்றது.
ஆரம்பகால வரலாறும், வளர்சியும்
எமது திண்னைப்பாடசாலை 1878ம் ஆண்டு பங்குனி மாதம் 5ந் திகதி நொத்தாரிசு இ.வைத்திலிங்ககம் அவர்களால் 332ம் இலக்கத்தில் நிறைவேறப்பட்ட உறுதியின்படி நான்கு பரப்புக் காணியில் அமையப் பெற்றதாகும். இக் காணியை அக்காலத்தில் இரு
சைவ
தர்மகத்தாவாக நியமிக்கப்பட்டார். ண்சைவத்தையும், தமிழையும் இரு கண்களாகக் கொண்டு வாழ்க்கையின் பயனை ஒவ்வொரு மனிதனும் பூரணமாக அடைவதற்கு கல்வி இன்றியமையாதது என்பதனை உணர்ந்து செயலாற்றினார்.முகாமையாளர் நிர்வாகமும் வளர்ச்சியும்
இப் பாடசாலையின் வளர்ச்சியை மனதில் கொண்டு ஸ்தாபித்தவர்களும், கோண்டாவில் மக்களும் இதெற்கென ஒரு பராமரிப்புத்தத்துவத்தை 1903ம் ஆண்டு பங்குனி மாதம் ஓர் மாகசபையைக் கூட்டி நிர்வாக சபையை நியமித்தனர். இச் சபையாள் பிரம்ம சிறீ. இராமசாமி ஐயர் முத்தையார் அவர்கள்
ஐந்தாம் வகுப்புவரை இயங்கிய இப்பாடசாலை 1915ல் கனிஸ்ட பாடசாலை நிலையைப் பெற்றிருந்தது. 1928ல் கல்வி இலாகா கனிஸ்ட பொதுத்தராரப் பத்திரப் பரீட்சைக்கு மாணவர்களைத் தோற்றுவதற்கு அங்கீகாரத்தை அளித்தது. இதன் பயனாக இக்காலத்தில் கோப்பாய் அரசினர் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை சாதனா பாடசாலை யாகவும் இது செயற்பட்டது.
மேலும், இக்காலப் பகுதியில் பாடசாலையின் நிர்வாகம்முகாமை யாளர்களின் கீழ் இயங்கியது. நீர் வேலி சங்கர பண்டிதர்,சிவப்பிரகச பண்டிதர், இந்து சாதனம் மனேஜர் திரு. சி. கந்தையாப்பிள்ளை, திரு. சி. நா. பொன்னையா ஆகியோர் முகாமையாளராக விளங்கினர். 1932ம் ஆண்டளவில் 1.5 பரப்பு நிலமும் 1838ம் ஆண்டில் ஏழுபரப்பு ஏழேகாற் குழி நிலமும் முகாமையாளர் காலத்தில் கிடைக்கப்பெற்றது . திரு. கி. ஆறுமுகம்
என்ற பெரியார் இவ்வாதனத்தை பாடசாலைக்கு நன்கொடையாக வழங்கினார். இக்காலத்தில் ஜநூறுக்கு மேற்பட்ட மாணவர்களும்.

No comments:
Post a Comment